நாய்கள்விநோதங்கள்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வளர்த்தவரிடம் சேர்ந்த லோலாஸ்

Lola Reunites With Her Owners After Three Years

செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களின் உலகம் இறக்கை இல்லாமல் பறப்பதற்குச் சமமாகும். ஆம்… அந்த அன்பிற்கு முன் பெரும் சமுத்திரமும் சிறு துளியாகும். தங்களைப் போலவே தாங்கள் வளர்க்கும் நாய்கள் மீதும் அக்கறை காட்டுபவர்கள் பலருக்கு பைத்தியம்போல் தெரியலாம்.

ஆனால் தனித்தன்மை வாய்ந்த அந்த அன்பிற்கு உரிய வார்த்தைகள் ஏதுமில்லை. அப்படி வளர்க்கும் செல்லப்பிராணிகள் தொலைந்துவிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் நிச்சயமாக வளர்ப்பவர்களுக்கு இருப்பதில்லை. அப்படி தொலைந்தவள்தான் லோலாஸ் எனும் கருப்பு நிறமுடைய பெண் லேபர் நாய்.

சிகாகோவில் பெட்ரோ மெஜியர்ஸு எனும் பெண் லோலாஸ் நாயை மிகச் செல்லமாக வளர்த்து வந்துள்ளார். தனது பிள்ளையைப்போல் ஒவ்வொரு நாளும் கவனித்து வநந்தாள். கடந்த 2017 ஆம் ஆண்டு சிகாகோவின் எல்க் க்ரோவ் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தான் வளர்த்த லோலாஸ் நாயுடன் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக லோலாஸ் வழிமாறி காணாமல் போய்விட்டாள். பெட்ரோவால் இந்த துயரத்தை தரங்கிக் கொள்ள முடியவில்லை. இரவு பகலாக தேடினாள் ஆனால் நாய் கிடைக்கவில்லை.

ஆனாலும் மனம் தளராமல் டெப்ரா மற்றும் அவரது கணவர் ஸ்டீவ் கோர் ஆகிய இருவருமாக சேர்ந்து கண்டுபிடிக்க தங்கள் சிறந்த முயற்சியை மேற்கொண்டனர். கூடுதலாக தங்களது நாயை கண்டுபிடிக்க அவர்கள் ஒரு தொழில்முறை செல்லப்பிராணி தேடுபவரை வேலைக்கு அமர்த்தினர்.

தங்களது வளர்ப்பு நாய் குறித்து ஒரு அறிவிப்பையும் பத்திரிக்கையில் வெளியிட்டனர். மேலும் லோலாவைக் கண்டுபிடிக்க தன்னார்வலர்களின் உதவிகளையும் நாடினர். ஆனால், அவளைக் கண்டுபிடிக்கும் அதிர்ஷ்டம் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை.

இந்நிலையில் கடந்த வாரம், கலிபோர்னியாவின் க்ளென்டேலில் பெட்ரோவுக்கு டூபேஜ் நாட்டு அதிகாரிகளிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில். க்ளென்டேலில் உள்ள ஒரு தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு லோலாஸ் நாயை பார்த்துள்ளனர். அந்த நாய் தொலைந்துவிட்டதை அறிந்து அவர்கள் அவளுக்கு உணவளித்து கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் டூபேஜ் கன்ட்ரி அனிமல் சர்வீசஸிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். அவர்கள் லோலாவின், மைக்ரோ சிப்பைக் கண்டுபிடித்தது, அது உரிமையாளர்களைப் பற்றிய தகவல்களை வழங்கியது மட்டுமின்றி ​​டெப்ராவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த செய்தியைக் கேட்டதும் ​​டெப்ரா தம்பதியினருக்கு அளவற்ற மகிழ்ச்சி. மீண்டும் தனது செல்லப்பிராணி தனது கையில் கிடைத்துள்ளதை எண்ணி கண்ணீர் வடித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான தேடலுக்குப் பின் டெப்ரா லோலாவுடன் மீண்டும் இணைந்தனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லோலாவைப் பார்ப்பதில் டெப்ராவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறினார்.

லோலா தனது பழைய பாசத்துடன் டெப்ராவைப் பார்த்ததும் வால் அசைத்தாள். மூன்று ஆண்டுகளாக கோரை எப்படி, எங்கே தப்பிப்பிழைத்தது என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை. விடாமுயற்சியும், தேடுதலும் தனது செல்லப்பிராணியை மீ்ட்டுத் தந்துள்ளது டெப்ராக்கு மட்டுமல்ல நமக்கும் ஆனந்தம்தான். அடுத்த ஒரு சுகமான சந்திப்பில் உங்களைச் சந்திக்கின்றேன்.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
7
+1
35
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

மு.இரமேஷ் குமார்

செல்லப்பிராணிகள் எனது உலகம். செல்லப்பிராணிகள் குறித்து எழுதுவது எனக்கு பேரின்பம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!