நாய்க்கு வாரம் ஒரு முறை டூத் பிரஷில் பல் விலக்குவது அவசியம்
Things to do in caring for dog teeth

பொதுவாக நாயின் பற்களில் சொத்தை ஏற்படாது. ஆயினும் பற்களில் கிருமித் தொற்றும் மற்றும் மஞ்சள் கறை உருவாகும்போது பற்சிதைவு ஏற்பட்டு அதிக வலி மற்றும் பல் இழப்பு நேரும். வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சிறிய பல்துலக்கும் பிரஷ் கொண்டு நன்கு துலக்க வேண்டும். பற்பசை, உப்பு நீர் அல்லது சோடா உப்பு போன்றவற்றைக்கொண்டு பல் ஈறு மற்றும் பற்களை முழுமையாகச் சுத்தமாகத் தவறாமல் துலக்கினால் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். மஞ்கள் கறையை நீக்காவிடில், கடினப் படிவமாகி எளிதில் நீக்க இயலாத நிலை ஏற்படும். அப்போது கால்நடை மருத்தவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
டூத் பிரஷ்
நாய்க்காக பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டுள்ள கோரப்பல் டூத் பிரஷை வாங்கியவுடனேயே, உங்கள் நாய்க்குட்டிக்கு பல் துலக்கும் வேலையை தொடங்குங்கள். 45 டிகிரி கோணத்தில் இருக்கும் முள்ளரும்பை கொண்ட இரண்டு தலை ப்ரஷ் உங்கள் நாய்க்குட்டியின் பற்களை துலக்க மிகவும் உதவிடும். குழந்தைகளை போல், நாய்க்குட்டியும் முதலில் அதனை தடுக்க முயலும். நீங்கள் தான் பொறுமையுடன் செயல்பட்டு அதனை மெதுவாக இந்த பழக்கத்திற்கு மாற்ற வேண்டும். அளவுக்கு அதிகமாக துலக்கி விடாதீர்கள். அது சும்மா இருக்கும் நேரத்தில் இதனை செய்திடுங்கள். முதலில் சிறிது நிமிடங்களுக்கு மட்டும் அதனை செய்திடுங்கள். உங்கள் நாய்க்குட்டிக்கு இது பழகியவுடன் நேரத்தை சற்று அதிகரித்து கொள்ளுங்கள்.
பற்கள் பராமரிப்பு பயிற்சி
நாய்க்குட்டி உங்கள் கைக்கு வந்த உடனேயே, பற்கள் பராமரிப்பு பயிற்சியில் அதனை ஈடுபடுத்த தொடங்கி விட வேண்டும். இப்பயிற்சிகளை சீக்கிரமாக தொடங்கி விடுவதே நல்லது. அப்போது தான் வளரும் போது, இப்பழக்கங்களுடன் வேகமாக அது ஒன்றி விடும். வளர்ந்த பின் அதனை பழக்கப்படுத்துவது சிரமமாகி விடும். இது ஒரு பழக்காமாகவே அதற்கு மாறி விடும். தாமதமாக பயிற்சியை தொடங்கினால் அதனை கட்டுப்படுத்துவது கஷ்டமாகி விடும்.
நாய்க்குட்டி பற்பசை
மனிதனின் பற்கள், நாய்க்குட்டியின் பற்களை விட வித்தியாசமானவை. அதனால் நீங்கள் பயன்படுத்தும் பற்பசையை உங்கள் நாய்க்கு கொடுக்காதீர்கள். அது அவ்வளவு பயனை அளிக்காது. நாய்கென விற்கப்படும் பற்பசையை கடைகளிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். செல்லப்பிராணிகளின் கடைகளுக்கு சென்று, ஃப்ளோரைட் போன்ற கனிமங்கள் இல்லாத பற்பசையாக பார்த்து வாங்குங்கள். அவை நாய்களுக்கு விஷத்தன்மையை உண்டாக்கி விடும்.