நாய்க்கு வளைகாப்பு நடத்திய வித்தியாசமான குடும்பம்
Canine Lucy Gets A Baby Shower Ceremony

செல்லப்பிராணிகளின் ப்ரியர்கள் செய்யும் செயல்கள் சில நேரம் அனைவரையும் ஆச்சர்யம் கொள்ளவைக்கும். அப்படி ஒரு செயல்தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றது. ஆமாம் அங்குள்ள ஒரு குடும்பத்தினர் அவர்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான பொமேரியன் பெண் நாய் லூசிக்கு வளைகாப்பு வைபோகத்தை நடத்தியுள்ளனர். பாரம்பரிய வளைகாப்பு விழாவாக நடத்தி அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது சமுுக வலைதளங்களில் வரைலாக பரவி வருகின்றது.
லூசி பெண் நாய் முதன் முறையாக கர்ப்பம் தரித்திருப்பதாகவும், அது எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றும், பெற்றோராக இருந்து அதற்கு பாரம்பரிய முறைப்படி மனிதர்களைப் போல் வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளோம் என்று அந்த குடும்பத்தைச் சேர்ந்த செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கூறியுள்ளனர்.
நம்பமுடியாத விசயம் என்றபோதும். இது உண்மையில் நடந்தே உள்ளது. ஆரத்தி, மலர் மாலைகள், குங்குமம், விருந்து என அனைத்தும் அந்த வளைகாப்பு விழாவில் களை கட்டியுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் லூசிக்கு வளைகாப்பு விழா அனைவரின் முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அக்குடும்பத்தின் உறவினர்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு லூசியை ஆசிர்வாதம் செய்துள்ளனர்.
கொரோனா கதவடைப்புக்கு பிறகு மெல்ல ஜன்னல்கள் மட்டும் திறந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு விழா தேவைதானா என்று ஒருபுறம் குற்றம் சாட்டினாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நாய்க்கு வளைகாப்பு நடத்தி, அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளனர் இந்த செல்லப்பிராணி லவ்வர்கள். இதற்கு என்னுடைய கருத்து லூசி கொடுத்துவைத்தவள். நாளை வேறு ஒரு ஆச்சர்யமான சந்திப்பில் உங்களை காண்கின்றேன்.
வீடியோ இணைப்பு