கட்டுரைகள்நாய்கள்வளர்ப்பு&பராமரிப்பு

நம் நாட்டை காவல் காக்கும் பணியில் வாயில்லா ஜீவன்கள்

Gateless lives in the task of guarding our country

வாயில்லா ஜீவன்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது நன்றியுள்ள நாய்கள். குறிப்பாக,நாட்டை காவல் காக்கும் பணியில் உள்ள மோப்ப நாய்கள். இதைத் தவிர்த்து மற்ற ஜீவன்களாக குதிரைகள், மட்ட குதிரைகள், கோவேறு கழுதைகள், யாக் ஆகிய விலங்குகளும் நம் நாட்டை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என்பது எத்தனை அன்பர்களுக்கு தெரியும்! மேலும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையில் புறாக்களும், யானைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதும் கூடுதல் தகவலாகும்.

இனி இக்கட்டுரையில் நம் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஒவ்வொரு விலங்குகளும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வாறு தங்களை அர்ப்பணித்து கொள்கிறது என்பதனை விரிவாக காண்போம்….

மோப்ப நாய்கள்:
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாய்களின் மோப்ப சக்தி மனிதர்களை விட 100000 மடங்கு அதிகம் கொண்டதாக உள்ளது. இரவில் பார்க்க கூடிய திறன் மனிதர்களை விட ஐந்து மடங்கு அதிகம் கொண்டுள்ளது. கேட்கும் திறனில் கூட மனிதர்களை விட பல மடங்கு தெளிவாக கேட்கும் திறன் கொண்டது. மேலும் நாய்கள் சிறந்த ஓட்டக்காரர்கள் கூட உதாரணமாக கிரே ஹவுண்ட்(Grey hound) என்ற நாயானது 40MPH என்ற வேகத்தில் ஓடும் திறன் பெற்றது.

ஆனால் மனிதர்களில் உலக அளவில் வேகமாக ஓடும் திறமை கொண்ட உசைன் போல்ட் அவர்களின் அதிக அளவு வேகம் 28 MPH என்று குறிப்பிடப்படுகிறது. ஆகவே மக்களே நாய்கள் துரத்தும்போது மனதில் நினைக்கவும் நாயை விட நம்மால் வேகமாக ஓட முடியாது என்று! ஆகிய மேற்கூறிய திறமைகளைப் பயன்படுத்தி தக்க பயிற்சி அளித்து நாட்டைக் காக்கும் பணிகளான போதைப்பொருள் கண்டுபிடித்தல், வெடிமருந்து பொருட்கள் கண்டுபிடித்தல், குற்ற நிகழ்வுகளை கண்டறிதல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல், மீட்புப் பணிகள், பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சி (Training) என்பது நாய்களிடம் இயல்பாகவே இருக்கும் மோப்ப திறன், பாதுகாக்கும் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழும் குணம், வேட்டையாடும் திறமை, விசுவாச குணங்கள் ஆகியவற்றை வெளிக்கொண்டுவரும் முயற்சியே பயிற்சியாகும். இதனை பற்றி பின்வரும் கட்டுரைகளில் விரிவாக காண்போம்.

இம்மாதிரியான பணிகளுக்கு German shepherd/Alsatian, Belgian shephard/Mallinois, Doberman, Labrador, Cocker spaniel ஆகிய நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நமது நாட்டு இனமான Mudhol hound/Caravan என்ற நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த கோம்பை என்ற நாய்களும் சிஆர்பிஎஃப் (CRPF)ல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

பல்வேறு மாநிலத்தில் உள்ள காவல்துறை, காவல் பணிகளுக்காக தெரு நாய்களுக்கு கூட தக்க பயிற்சி அளித்து  பயன்படுத்தப்படுகிறதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஒரு உயர் காவல் அதிகாரி அவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள தெரு நாய்களை தத்தெடுத்து தக்க பயிற்சி கொடுத்து காவல் நாய்களாக (Guard dog) பயன்படுத்தஅறிவுரை வழங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

குதிரைகள்:


குதிரைகளின் ஆற்றல்கள் மற்றும் வலிமையை பொருத்து அவைகளை Polo, Tent pegging, Show jumping, Dressage போன்ற விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிக கடுமையான குளிர் உள்ள, பனிபடர்ந்த மற்றும் வாகனம் செல்ல முடியாத எல்லைப்பகுதிகளில் காவல் காக்கும் ராணுவ மற்றும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், ஆயுத தளவாடங்களை கொண்டு செல்வதற்கும் மட்டக் குதிரைகள், கோவேறு கழுதைகள் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. மேலும் குதிரை ஏற்ற பயிற்சியின் மூலம் வீரர்களுக்கு தலைமைத்துவப் பண்புகள் மற்றும் உடல் வலிமை கிடைக்கின்றது. மாநில காவல் படையில் உள்ள குதிரைப்படை, கலவரங்கள் மற்றும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுகிறது.

யாக் (YAK):

யாக் என்பது மாடு போன்ற விலங்காகும் ஆனால் இவைகள் மிக அடர்த்தியான ரோமங்களையும், பனிபடர்ந்த, கரடுமுரடான இடங்களுக்கு ஏற்றவாறு வாழும் தன்மையுடனும், மிகுந்த வலிமையும், சுமார் 400 முதல் 500 கிலோ கிராம் வரை உடல் எடை கொண்ட விலங்காகவும் உள்ளது. இதனுடைய முக்கிய பணி ஆயுத தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கும், வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பணி படர்ந்துள்ள வாகனங்கள் செல்ல முடியாத இந்திய எல்லைப்பகுதியில் இதன் பணி மிகவும் இன்றியமையாததாகும். சீனாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த விலங்கினை கரடுமுரடான எல்லைப்பகுதிகளில் ரோந்து பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

யானைகள்:

யானைகள் என்றவுடன் யானைப்படை தான் நம் நினைவுக்கு வரும். வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் இதனுடைய பயன்பாடு வெகுவாக குறைந்து இல்லாமல் போய்விட்டது. மிக அதிக எடை கொண்ட ஆயுதங்களை போரின்போது எடுத்துச் செல்வதற்கு பயன்பட்டு வந்தன. இதனுடைய மிகுந்த வலிமையையும், தைரியத்தையும் வைத்து போரில் எதிரிகளை அஞ்ச வைப்பதற்கும், அடித்து துவம்சம் பண்ணுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

புறாக்கள்:

புறாக்கள் என்றவுடன் தூது விடுதல் அதாவது செய்தி அனுப்புதல் என்பது அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆம், புறாக்கள் அந்தகாலத்து டிரோன் கேமராக்கள். செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கும், செய்திகளை வாங்கி வருவதற்கும் ஒரு நாட்டின் தூதராக செயல்பட்டு வந்தன. இதனுடைய ஞாபகசக்தி திறமையை வைத்து பல கிலோமீட்டர் தூரம் வரை சென்று தன்னுடைய இடத்திற்கு சரியாக வந்துவிடும் திறன் கொண்டது.

டால்ஃபின் (Dolphin ):

இது என்ன… நம்ம பட்டியலில் இல்லை என்று பார்க்கிறீர்களா! யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா டால்பின்களை அதன் கடல் படை பிரிவில் (US Navy marine mammal program) பயன்படுத்தி வருகிறது. இவைகளின் நுண்ணறிவை பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்பட்டு கடலுக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதற்காக  உபயோகப்படுத்துகின்றனர்.

மேலே கூறிய அனைத்து விலங்குகளும் தங்களின் பணியின்போது அல்லது போரின்போதும் எந்தவித மறுப்பும் இன்றி தங்களின் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளது என்றாள் அதை யாராலும் மறுக்க முடியாது. உதாரணமாக, மனிதர்களாகிய நாம் வெடிபொருள் வெடித்துவிடும் அந்த இடத்திற்கு போக கூடாது என்று பயப்படுவோம்.

ஆனால் நன்றியுள்ள நாய் ஆனது தன் எஜமானின் கட்டளைக்கிணங்க பயப்படாமல் தன் உயிரை பணயம் வைத்து மற்ற உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு நம்முடைய ராணுவ வீரர்களைப் போல தங்கள் கடமையைச் செய்கின்றன. எனவே அவைகள் சாதாரண மோப்ப நாய்கள் அல்ல. நம் நாட்டைக் காக்கும் காவல் தெய்வங்களே! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் Zanjeer என்ற மோப்ப நாயானது 11 Military bombs, 57 Country made bombs, 175 Petrol bombs and 600 Detonators பணியில் கண்டுபிடித்துள்ளது.

Anny என்ற மோப்பநாய் ஆனது ரூபாய் 3 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை மும்பை விமான நிலையத்தில் கண்டுபிடித்துள்ளது. Fanta என்ற மோப்ப நாய் ஆனது 10 கிலோ கிராம் அளவுள்ள RDX வெடிபொருட்களை அமர்நாத் யாத்திரையின் போது கண்டுபிடித்துள்ளது.

இது மட்டுமில்லாமல் கொழுந்துவிட்டு தீப்பற்றி எரியும் ஒரு வீட்டில் யாரும் உள்ளே போக முடியாத சூழ்நிலையில் ஒரு குழந்தை சிக்கிக்கொண்ட நிலையில் அந்த வீட்டின் நாயானது தீயை பொருட்படுத்தாமல் அக்குழந்தையை கவ்விக்கொண்டு உயிரைக் காப்பாற்றிய விஷயம் செய்திகளின் வாயிலாக நிறைய பேருக்கு நினைவுக்கு வரலாம்.மேலும் வீட்டிற்குள் நுழைய முயலும் பாம்புகளிடம் நாய்கள் போரிட்டு தங்கள் உயிரை அந்த குடும்பத்தினருக்காக அர்ப்பணித்து உள்ளது என்ற செய்தியும் நினைவுக்கு வரலாம்.

மழை, புயல் காலங்களில் விழுந்துகிடக்கும் Electric wire ஆல் ஏற்படக்கூடிய மனித உயிர் இழப்பை கூட தன்னுடைய கூர்மையான அறிவினால் காப்பாற்றியுள்ளது என்பதனை செய்திகள் மூலம் அறிந்திருக்கலாம். இன்னும் எத்தனையோ செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இது அனைத்திற்கும் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்! அன்பும், விசுவாசமும் (Love and Loyalty) மட்டுமே. அப்படி என்றால் நாம் ஏன் அதைத் திருப்பிக் கொடுக்க கூடாது!

குதிரை, காளை மாடு போன்ற விலங்குகளின் மீது சுமை வைக்கும்போது எந்த ஒரு விலங்கும் என் மீது சுமை வைக்காதீர்கள் என்று சொல்லி கேட்டதுண்டா! தங்கள் எஜமானரின் அன்பிற்காக விசுவாசத்துடன் தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் செய்கிறது என்பதே உண்மை.

இந்த உலகம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல என்பதனை அனைவரும் உணர வேண்டும். தெருநாய்கள் புறக்கணிக்கபடுவதற்கு காரணம் அதனைப் பற்றிய அறியாமையே முதல் காரணம் ஆகும். நாய்கள் என்றாலே அது என்ன உயர் ரக நாய்கள், நாட்டு இன நாய்கள்! எல்லாமே நாய்கள் தானே! இன்றைய காலகட்டத்தில் இது போன்ற வேறுபாடுகள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தெரு நாய்கள் அதிகம் உலவுகின்றன.

தெரு நாய்களுக்கும் மற்ற நாய்களை போன்று அனைத்து திறமைகளும் உள்ளன என்பதை நாம் புரிய வேண்டும். ஆகவே நாய் வளர்க்க ஆசைப்படுவோர் தெரு நாய்களை தத்தெடுத்து கூட வளர்க்கலாம். இதனால் செலவு மிச்சம் கண்டிப்பாக ஏற்படும். ஏனென்றால், அனைவருக்கும் தெரிந்த விஷயமே! நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நாய்கள் நமது தெரு நாய்கள். முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தான் தெரு நாய்களுக்கு தேவையற்ற வியாதிகள் ஏற்படுகின்றன.

எனவே அனைத்து விலங்குகளிடமும் அன்பு காட்டுவோம்! உதவிக்கரம் நீட்டுவோம் ! மேலும் குறிப்பாக இந்த COVID19 ஊரடங்கின் போது நமது உதவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே எனது முதல் முயற்சியாக ஒரு கால்நடை மருத்துவராக நமது மக்களுக்காக செல்லப்பிராணிகள் குறித்த சந்தேகங்களுக்கு இலவச ஆலோசனை(online tele consultation) என்ற முடிவு செய்துள்ளேன். இதனை அனைவரும் பயன்படுத்துவதற்கு எனது Whats App NO: 7010291843 என்ற எண்ணை பதிவிடுகிறேன். இந்த எண் மூலம் தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம்.

ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!

Dr.Mohanasundaram.N

Official Address:
Asst commandant/Vet
Central Armed Police Force.     

Home Address:
Meenambalpuram,
Near Saravana hospital,
Madurai.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
hellomadurai.in

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!