
தோனி படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்து அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளையடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், ஜூன் 13ந் தேதி (2020) ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாகியுள்ளது. அவரது குடும்பத்தினர் சுக்குநூறாக உடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் அன்பாக வளர்த்து வந்த பிளாக் கலர் லேபர் நாய் அவரைக் காணாது தினமும் தவித்து வருகிறது. அதை நாம் கேட்கும்போது நம் கண்களில் இருந்து கண்ணீரும் வருகிறது.
ஆம்… நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை அவரது குடும்பத்தாரின் கனவுளை உடைத்தெறிந்துள்ள நிலையில், தற்கொலையான அன்றைய தினம் சுஷாந்த் சிங் மூச்சு, பேச்சு இல்லாமல் ஆபுலன்சில் அழைத்து செல்லப்பட்டார். இதை அவரது செல்ல நாய் பார்த்துக் கொண்டே இருந்தது. தன்னுடைய எஜமான் சுஷாந்த் வருவார் என ஒவ்வொரு நாளும் நம்பி நம்பி ஏமார்ந்து கொண்டிருக்கிறது. வீட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்ட சுஷாந்த் சிங் மறுபடியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அது ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கின்றது.
ஆனால், அவர் வீட்டிற்கு வராததால், சோகமாகவே காணப்படும் அந்த நாய், கார் சவுண்டு கேட்கும் போதெல்லாம் சுஷாந்த் வீட்டுக்கு வந்து விட்டாரா என ஓடி சென்று பார்க்கிறது. அவர் வரவில்லை, வேறு யாரோ என தெரிந்ததும் சோகமாக வீட்டிற்குள் மீண்டும் வந்து படுத்துக் கொள்கிறது. மேலும் சுஷாந்தின் படுக்கை அறையை சுற்றி சுற்றி வருகிறது. இதன் தவிப்பை அறிந்து, சுஷாந்த் வீட்டில் உள்ளவர்கள் அவருடைய புகைப்படத்தை செல் போனில் வைத்து தந்தால், அதனை நக்கி தன்னுடைய பாசத்தை காட்டுகிறது. இந்த காட்சிகள் பார்பவர்களையே கண் கலங்க வைத்துள்ளது. அதற்கு தெரியாது சுஷாந்த் சிங் ராஜ்புட் இனி வரமாட்டார் என்பது. ஆனாலும் அது வாழும் வரை தேடிக் கொண்டே இருக்கும். சுஷாந்த் சிங் எப்போது வருவார்…. ?