தெருநாய் குட்டிகளுக்கு தொலைகாட்சி பெட்டியில் வீடு கட்டிக் கொடுக்கும் இளைஞர்
A Youth Builds Kennels From Old TV Sets To Help Stray Pooches

இந்தியாவில் தெரு நாய்கள் பெரும்பாலும் அனாதையாக விடப்படுவது பல்லாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சோகமான விசயம் ஆகும். விலங்குகள் மீட்பு குழுவினர்களும், மனிதாபிமானம் உள்ள சில மனங்களினாலும் இந்த தெரு நாய்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கின்றது. விலங்குகள் தன்னார்வலர்கள் செயல்கள் பல நேரங்களில் தெரு நாய்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அப்படி ஒரு செயலைத்தான் அசாமில் வசித்துவரும் “அபிஜித் டோவாரா” எனும் இளைஞர் செய்துள்ளார்.
பருவ மாற்றத்தால் நிகழும் கால நேரங்களில் தெருநாய்கள் மிகவும் அவதி அடைகின்றன. குறிப்பாக மழை காலங்களில் அவைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகின்றன. அதிலும் குளிர் காலத்தில் நாய்களின் இனப்பெருக்க காலம் என்பதால் அவைகளின் குட்டிகள் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடுகின்றன. பல குட்டி நாய்கள் சீதோஷ்ண நிலையை தாங்கிக் கொள்ள இயலாது இறந்து விடுவது வழக்கமான ஒன்றாகும்.
இதுபோன்ற சூழ்நிலையில் குட்டி நாய்களை எப்படி காப்பது என்ற யோசனை இளைஞருக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. தான் கடந்து சென்ற பாதை எங்கிலும் அனாதையாக தவித்துக் கொண்டிருந்து தெரு நாய் குட்டிகளை பார்த்து. தனது பரிதாபத்தை செலுத்திவிடாமல், தன் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி, குட்டி நாய்களுக்கான சிறு வீடு (கொட்டகை) அமைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் உதவாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த தொலை காட்சிப் பெட்டியை, நாய் குட்டிகளின் இருப்பிடமாக மாற்றிக் கொடுத்தார்.
இதுகுறித்து “அபிஜித் டோவாரா” கூறுகையில், தவறான நாய்க்குட்டிகளின் போராட்டத்தை தான் பார்த்ததாகவும், அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய விரும்புவதாகவும். வழிதவறிய நாய்குட்டிகளுக்கு சிறிய வீடுகளைக் கட்டும் எண்ணத்துடன் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் இதற்காக ஒரு சிறிய கொட்டில் அமைத்துக் கொடுத்தால், அவர்கள் இரவில் மற்றும் வானிலை மோசமாக இருக்கும் நேரங்களில் பாதுகாப்பாக இருக்க உதவும். அதற்காக பழைய தொலைக்காட்சி பெட்டிகள் நிராகரிக்கப்படுவதைக் கண்டதாக அபிஜித் மேலும் கூறினார்.
அதாவது இந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகள் பெரிய நாய்களுக்கு வீடாக அமையாது என்றபோதும், குட்டி நாய்களுக்கு அடைக்களமாக அமையும் என்றார். அவர் குட்டி நாய்கள் வசிக்கும் இந்த வீட்டிற்கு “பாட்டர் கோர்” என்று பெயரிட்டுள்ளார். அதாவது “நாய்களுக்கான தெரு வீடு” ( STREET DOG HOME) என்று பொருள்.
மேலும் இதுகுறித்து“அபிஜித் டோவாரா” இப்போது ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இது அவரது சிறிய முயற்சி வளர உதவும். இதுபோன்ற “பேட்டர் கோர்” ஐ தங்கள் வட்டாரத்தில் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் பங்கு கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதன் முதல் முயற்சியாக தனது “பேட்டர் கோர்” நாய் குட்டிகளுடன் ஒரு புகைப்படத்தை சமு]க வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது மழைக் காலங்களில் தவித்து வரும் சாலையோர தெரு நாய் குட்டிகளுக்கு பல சிறிய வீடுகள் அமைக்க உதவியாக மாறும் என்று நம்புகின்றார்.
அவரது முயற்சிக்கு தமிழ் பெட்ஸ் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, பலரிடமும் இதை எடுத்துச் செல்கின்றது. நீங்களும் மறக்காமல் ஒரு ஷேர் செய்யுங்கள். யாரேனும் ஒருவர் ஒரு குட்டி நாய்க்கு சிறு விடு கட்டி கொடுக்கலாம். இதுபோன்ற வேறு ஒரு சுவாரஸ்யமான தகவலுடன் உங்களை மீண்டும் சந்திக்கின்றேன்.
nfdhh