கட்டுரைகள்விநோதங்கள்

தங்கப் பதக்கம் வென்ற மாகவா எலி ; கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் புலி

Rat Receives Gold Medal for Detecting Landmines

பொதுவாக விலங்குகளில் கண்டுபிடிப்புக்கான பரிசுகளை எப்பொழுதும் தட்டிச் செல்வது  நாய்கள்தான். ஆனால் முதன் முறையாக தங்கபப்பதக்கத்தைச் தட்டிச் சென்று அனைவரின் பார்வையையும், பாராட்டையும் பெற்றுள்ளது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மகாவா எனும் எலி, சுரங்கங்களில் உள்ள கண்ணி வெடிகளை கண்டுபிடித்தற்காக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது இந்த பெரிய எலி. ஆச்சர்யமான இந்த வெற்றி அனைவரையும் அதிசயக்கவைத்துள்ளது.

மாகவா என்ற ஏழு வயதான  ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரிய எலி, பி.டி.எஸ்.ஏ (நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்) தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. வெடிக்கும் கண்ணி வெடிகளை அகற்றுவதில் மிகவும் சாமர்த்தியமாக செய்த பணிக்காக இப்பதக்கத்தை பெற்றுள்ளது. மாகவா இப்போது கம்போடிய நாட்டில் உள்ள சுரங்கங்கள் தோண்டும் மையத்துடன் இணைந்து அந்நாட்டில் வெடிக்காத ஆயுதங்களைக் கண்டறியும் பணியினை தொடர்ந்து செய்து வருகின்றது.

இதுவரை மாகவா வேலைக்கு சேர்ந்த நாள் முதல் தன் வாழ்க்கையில்,  39 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் 28 வெடிக்காத ஆயுதங்களைக் கண்டறிந்துள்ளது. இதற்கான பிரத்யேக கண்டுபிடிக்கும் பயிற்சியை தான்சானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பெல்ஜியம் அறக்கட்டளை இந்த பயிற்சியை அளித்து வருகிறது, இந்த அமைப்பு 1990 ஆம் ஆண்டு முதல் விலங்குகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

கண்ணிவெடிகள் மற்றும் காசநோயைக் கண்டறிய உதவுவதில் இந்த எலிகள் ஹீரோக்கள். ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு, விலங்குகள் அத்தகைய பணிகளைச் செய்ய சான்றிதழ் பெறுகின்றன. இங்கு முக்கியமாக எலிகளுக்கு ரசாயன கலவை, வெடிபொருட்களைக் கண்டறிவதற்குப் பயிற்சியளிக்கப்படுகின்றன. நம்ப முடியாத விசயமாக இருந்தாலும் 30 ஆண்டுகளாக இநந்த பணியைச் செய்துவருகிறது இந்நிறுவனம்.

PDSA இன் தங்க பதக்கமானது, தனது பணியை திறமையுடன் மற்றும் கடமை உணர்வுடன் செய்யும் விலங்குகளுக்கு வழங்கப்படும் ஒன்றாகும். இதுவரை 30 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ள விலங்குகளில். மாகவா இந்த விருதைப் பெற்ற முதல் எலி ஆகும். மகாவா மற்ற எலிகளை விட சற்று பெரிய ஆண் எலி ஆகும். மாகவா தான்சானியாவில் பிறந்து வளர்ந்தது. 1.2 கிலோ எடையும், 70 செ.மீ நீளமும் உடையது. சாதாரண வகை எலிகளைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருந்தாலும், சுரங்கங்களில் கீழே புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக எளிதாக கண்டுபிடிப்பதில் கெட்டிக்காரன்.

ஒரு மனிதன் . மெட்டல் டிடெக்டரின் உதவியுடன் ஒன்று முதல் நான்கு நாட்கள்  செய்யும் பணியினை, 20 நிமிடங்களில் தேடி முடித்துவிடும் ஆற்றல் கொண்டவன். கம்போடியாவில் 1979 முதல்  நில சுரங்கங்களில் ஏற்படும் கண்ணி வெடி தாக்குதலில் 25,000 க்கும் மேற்பட்டவர்கள் கை, கால்களை இழந்து (Amputees)  ஊனமாகியுள்ளனர்.   இதேபோல் 64,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இப்படிப்பட் கொடுமையான கண்ணிவெடிகள் ஆபத்தில் இருந்த பல மனிதர்களின் உயிரைக் காப்பாற்றியதால் மகவா ஒரு சிறந்த மீட்பாளன் என்ற தங்க விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் செய்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் உள்ளூர்வாசிகளுக்கு மரணம் மற்றும் காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைத்துள்ளது என்பது உண்மை. அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவும், காப்பாற்றப்படுபவர்களுக்கு கடவுகளாகவும் மாகாவ வாழ்ந்து கொண்டிருக்கின்றது. நாம் எலிகளை எப்படிக் கொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில், நம்மைக் காப்பாற்றும் வேலையை  ஒரு எலி செய்து கொண்டிருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் நாம், விலங்குகளின் மீது இன்னும் கருணை உள்ளத்தோடு !!


பயிற்சியாளருடன் பணியில் மகாவா எலி


கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் பணியில் ( வட்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட கண்ணிவெடி)


தங்கப் பதக்கத்தை வென்ற குசியில்

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

மு.இரமேஷ் குமார்

செல்லப்பிராணிகள் எனது உலகம். செல்லப்பிராணிகள் குறித்து எழுதுவது எனக்கு பேரின்பம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!