நாட்டு நாய்கள்நாய்கள்

கன்னி நாய்கள் ஓர் தேடல்

Kanni Dog | Native Dog | Indian Dog

காற்றைக் கிழித்துச் செல்லும் அதிவேக ஒட்டம், இந்த நாய் இனத்தைப் முதல்முறையாகப் பார்ப்பவர்களுக்கு பெரும் வியப்பைத் தரும் – இதுதான் கன்னி என வழங்கப்படும் நம் நாட்டு நாய் இனத்தின் தனித்தன்மை.

நல்ல கூரான நீண்ட முகம், சிறிய தலை, நன்கு கீழிறங்கிய மார்பு, மெலிந்த-நீளமான உடல், மிகக்குறைந்த ரோமம், நீண்ட மெல்லிய வால் ஆகியவற்றுடன்தான் கன்னி நானுடைய தோற்றம் அமைந்திருக்கும்.

மேற்கூறிய தோற்றத்துடன் வேட்டை நாய் கருப்பு நிறத்தில் வந்தால் கன்னி என்றும் அதே தோற்றத்துடன் வேறு நிறத்தில் இருந்தால் அது ‘சிப்பிப்பாறை’ என்றும் முன்பு கூறப்பட்டுவந்தது. பின்னர், இரண்டு நிறம் கொண்டவையும் ஒரே வகைதான், நிறம் மட்டுமே மாறுபடுகிறது என்று கருதப்பட்டது.

ஆனால் இந்த ரெண்டு பெயர் மட்டும் அல்லாது இவற்றுக்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன: உதாரணமாக பொடித்தல நாய், ஊசிமுஞ்சிநாய், கூழைவால் நாய், குவளைவாய் நாய், மொசக்கடி நாய், குருமலை நாய், குருந்தன்மொழி நாய், தோல்நாய்…

விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ஊரைச் சார்ந்த சாம்பல் நிற நாய்கள் மூலமாகத்தான் இந்த நாய்களுக்கு சிப்பிப்பாறை என்ற பெயர் முதலில் வந்தது. நாளடைவில் அந்த நாய்கள் அழிந்துபோக சிப்பிப்பாறையைச் சுற்றியிருந்த ஊர்களைச் சேர்ந்த மற்ற நாய்களுக்கும் அதே பெயர் வழங்கப்பட ஆரம்பித்தது.

யார் இந்த ‘கன்னி’?

இந்த நாய்க்குக் கன்னி என்று பெயர் வந்ததற்கு என்ன காரணமாக இருக்கும்? திருமணத்தின்போது சீதனமாக இந்த நாயைக் கொடுப்பதால், இதற்குக் ‘கன்னி’ என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால்,

அது கட்டுக்கதை.

இந்த நாய்களை ‘பொலிகார்ஸ் ஹவுண்ட்’ என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். எந்த இனக்குழு இந்த நாய்களை ஆதியில் அறிமுகம் செய்ததோ, அந்த இனக்குழுவின் பெயருடன் சேர்த்து அழைப்பது ஆங்கிலேயர்களின் வழக்கம். நாயக்கர் ஆட்சியின்போது மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அதற்கானத் தளபதிகளை நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அந்தத் தளபதிகள்தான் பொலிகார்கள்.

ஃபிளாரென்ஸ் அம்ஹெர்ஸ்ட் என்பவர், 1909-ம் ஆண்டு வெளியான தனது ‘ஓரியண்டல் கிரேஹவுண்ட்ஸ்’ எனும் கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

பொலிகார் நாய்கள் மதராஸ் மாகாணத்துக்கு உரியவை. அவை தாங்கிவரும் பெயர் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த படைகளின் தலைவர்களுடையவை. அவர்களே இந்த நாயின் அசலான உரிமையாளர்கள். அவை ரோமம் அற்ற தோலும் உடல் வலுவும் கொண்டவை. அதன் தோற்றம் ‘கிரேஹவுண்ட்’ நாய்களைப் போன்றதாக உள்ளது” என்று

நிறம் தந்த பெயர்

அதற்கும் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு ஒன்றில் ‘பொலிகார்கள், வேட்டையாடுவதில் அதிகம் உவகை கொண்டவர்கள். அதனால் அதிகளவு நாய்களை வைத்திருந்தார்கள். அத்துடன் கால்நடைகளையும் நாய்களையும் அடிக்கடி பண்டமாற்றம் செய்துகொண்டனர். அவர்கள் தெலுங்கு மொழி பேசும் கம்பளத்தார்கள்’ என்று கிழக்கிந்தியக் காலனி இதழின் 10-வது தொகுப்பில் ‘அக்கவுண்ட்ஸ் ஆஃப் தொட்டியர்ஸ்’ என்ற கட்டுரையில் கூறப்படுகிறது.

இன்றளவிலும் கம்பளத்து நாயக்கர்கள் வாழும் கிராமங்களில் இந்த நாய்கள் அதிகளவில் காணப்படுவதே இதற்குச் சாட்சி. அவர்களிடமிருந்து, இடையர் குல மக்களிடம் இந்த நாய்கள் அதிக அளவில் பரவின. இடையர்கள் மூலம் வந்த பெயர்தான் ‘கன்னி’.

கன்னி என்பது நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள ஆட்டு இனம். இவை கரு நிறத்திலும், கண்ணுக்கு மேலேயும், தாடைப் பக்கத்திலும், கால்களிலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அவற்றைப் போன்ற நிறத்தில் இருந்த இந்த நாய்களுக்கும், அதே பெயர் வழங்கப்பட்டது.

சரி கன்னி நாய் மூதாதையர் தமிழகம் வந்ததை பார்த்தோம். சொல்லப்போனால், இந்தக் கூர்நாசி நாய்கள் இந்தியாவுக்கே புதியவைதான். முகலாயர் ஆட்சியின்போதுதான் அரேபிய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அதிக அளவில் ‘ஸ்லோகி ஹவுண்ட்ஸ்’ எனப்படும் நாய் இனம் இந்தியாவை வந்தடைந்தது!

இன்றைக்கும் deccan நில் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘காரவன் ஹவுண்ட்’ அல்லது ‘முதோல் ஹவுண்ட்’ நாய் இனம், ஸ்லோகி ஹவுண்ட் வழியாகப் பிறந்ததே. அதுவே தக்காணப் பீடபூமிக்குப் பரவி இங்கு வந்தது.

அதன்பிறகு ஆங்கிலேயர்கள் வேட்டையாடுவதற்காக ‘மெட்ராஸ் ஹன்ட் கிளப்’பை உருவாக்கி ஆயிரக்கணக்கிலான நாய்களை இறக்குமதி செய்தனர். அவற்றில் பல நமது மண்ணின் வெப்பத்தைத் தாங்காமல் இறந்து போயின. மீதமிருந்த நாய்களையும், மத்திய ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்லோகி இன நாய்களையும் நம்முடைய ‘பொலிகார் ஹவுண்ட்’களுடன் சேர்த்து கலப்பினத்தை ஏற்படுத்தினர். அது மீண்டும் பொலிகார்களிடம், அதிகஅளவிலான கூர்நாசி நாய்களைக் கொண்டு சேர்த்தது.

ஜமீன்கள் வளர்த்த நாய்கள்

காலப்போக்கில் அந்நிய நாய் இனங்களில் ஜமீந்தார்கள் ஆர்வம்கொள்ள, இந்த நாய்கள் எளிய மக்களிடம் சென்றடைந்தன. அவர்கள்தான் அதை விடாமல் இன்றுவரை பாதுகாத்துவருகின்றனர்.

இப்படியான பல வழிப் பகிர்வு மூலம் உருவானதே இந்த ‘கன்னி நாய்’. இன்று தென் மாவட்டங்களில் அதிக அளவில் பல சமூகத்தினராலும் இந்த வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன.

குருவழி பயிலுதல்

இன்றளவிலும் இந்த நாய்கள் பற்றிய அறிவு ‘குருவழி பயிலுதல்’ மூலம்தான் நடைபெறுகின்றது. குருவிடம் நாய்களைத் தேர்வு செய்வதையும் அதன் நுணுக்கங்களையும் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிகின்றனர். அன்றைய காலகட்டத்தில், குட்டிகளை விற்கும் வழக்கம் இல்லை. எனவே, தேவை ஏற்படும்போது மட்டும் நாய்களை இணை சேர்த்து அந்தக் குட்டிகளில் சிறந்ததைத் தேர்வு செய்து, மீதம் உள்ள குட்டிகளைக் கொன்றுவிடும் வழக்கம் இருந்தது.

அப்படித் தேர்வு செய்யப்பட்டு வளர்ந்த நாய்களின் குட்டிகளையே குருநாதரிடமிருந்து பெறுகின்றனர். அவர்களைக் கவுரவிக்கும் பொருட்டு இது ‘இன்னார் இனவழி வந்தது’ என்று தனது குருநாதர் பெயரை முன்மொழிந்து நாய்களை வழங்குவார்கள். அன்றும் இன்றும் அவை அடையாளக் குறியீடு மட்டுமே.

இந்த நாய்கள் தமிழகத்தில் தடம் பதித்துக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆகிவிட்டன. நம் மண்ணோடும் மக்களோடும் பழகி எளிய மக்களிடம் ஒரு அமரத்துவமான நெருக்கத்தை இந்த நாய் இனம் கண்டுள்ளது. தென் தமிழகக் கிராமங்களின் அடையாளமாக மாறி தமிழகத்தின் தனி இனம் என்கிற பெயரை கன்னி நாய் பெற்றுள்ளது. இவை வேட்டைக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தன.

1973-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேட்டை தடை செய்யப்பட்டது. இதனால் கன்னி நாய்கள் வேட்டைக்கான பயன்பாட்டை இழந்த போதிலும், இன்றும் அதிக அளவில் கிராமங்களில் வளர்க்கப்பட்டுவருகின்றன.

– தேடல் தொடரும் எழுத்து
இரா.சிவசித்து

________________________________________________________________________________________________________________

#ஒற்றைகுறுக்கு #இரட்டைகுறுக்கு #ஒற்றைகுறுக்குநாய் #ஒற்றைகுறுக்குகன்னிநாய் #ஒற்றைகுறுக்குநாட்டுநாய் #ஒற்றைகுறுக்குபயன்கள் #ஒற்றைகுறுக்குபாயும்முறை #ஒற்றைகுறுக்குபயணம் #ஒற்றைகுறுக்குதேடல் #ஒற்றைகுறுக்குவிரிவாக்கம் #ஒற்றைகுறுக்குகுறிப்பு #ஒற்றைகுறுக்குஇனவழி #ஒற்றைகுறுக்குவரலாறு #இரட்டைகுறுக்குநாய் #இரட்டைகுறுக்குகன்னிநாய் #இரட்டைகுறுக்குநாட்டுநாய் #இரட்டைகுறுக்குபயன்கள் #இரட்டைகுறுக்குபாயும்முறை #இரட்டைகுறுக்குபயணம் #இரட்டைறுக்குதேடல் #இரட்டைகுறுக்குவிரிவாக்கம் #இரட்டைகுறுக்குகுறிப்பு #இரட்டைகுறுக்குஇனவழி #இரட்டைகுறுக்குவரலாறு #சிப்பிப்பாறை #சிப்பிப்பாறைகுட்டி #சிப்பிப்பாறைநாய் #சிப்பிப்பாறைநாய்கள் #சிப்பிப்பாறைகுட்டிகள் #சிப்பிப்பாறைநாய்விற்பனை #சிப்பிப்பாறைவளர்ப்பு #சிப்பிப்பாறைஊர் #சிப்பிப்பாறைவேட்டைநாய் #சிப்பிப்பாறைபெண்நாய் #சிப்பிப்பாறைஆண்நாய் #சிப்பிப்பாறைஇனம் #சிப்பிப்பாறைவரலாறு #சிப்பிப்பாறைபயணம் #சிப்பிப்பாறைஉணவு #சிப்பிப்பாறைகுத்துகாது #சிப்பிப்பாறைமறை #சிப்பிப்பாறைகால் #சிப்பிப்பாறைவால் #சிப்பிப்பாறைவாழ்க்கை #சிப்பிப்பாறைஓட்டம் #சிப்பிப்பாறைசிறப்பு #சிப்பிப்பாறைபுகைப்படங்கள் #சிப்பிப்பாறைவீடியோ #சிப்பிப்பாறைகாவல் #சிப்பிப்பாறைதிறமை #சிப்பிப்பாறைபாதுகாப்பு #சிப்பிப்பாறைமயிலை #சிப்பிப்பாறைமயிலைநிறம் #சிப்பிப்பாறைமயிலைகுட்டி #சிப்பிப்பாறைமயிலைவளர்ப்பு #கன்னி #கன்னிநாய் #கன்னிநாய்வளர்ப்பு #கன்னிநாய்மீட்பு #கன்னிநாய்குட்டி #கன்னிநாய்பயிற்சி #கன்னிநாய்வளர்ச்சி #கன்னிநாய்சிறப்பு #கன்னிநாய்விளையாட்டு #கன்னிநாய் #கன்னிநாய் #கன்னிநாய்இனம் #கன்னிநாய்காவல்திறமை #கன்னிநாய்காவலன் #கன்னிநாய்காவல் #கன்னிநாய்விற்பனை #கன்னிநாய்பண்ணை #கன்னிநாய்பண்ணைவிற்பனை #சிப்பிப்பாறைநாய்பண்ணை #கன்னிசிப்பிப்பாறைநாய் #பரியேறும்பெருமாள் #பருக்கி #பால்கன்னி #சுத்தகன்னி #செவலை #தேன்பருக்கி #சாம்ப #சாம்பை #மொசக்கடி #சாதிநாய் #ஜாதிநாய் #பொடித்தலநாய் #பொடித்தலைநாய் #குறுந்தங்குடிநாய் #முல்லைநாய் #பிள்ளநாய் #பிள்ளைநாய் #சந்தனபிள்ளநாய் #சந்தனபுள்ளநாய் #சந்தனபிள்ளைநாய் #செங்கன்னி #கருங்கன்னி #மயிலை #மயிலைநாய் #மயிலைவளர்ப்பு #மயிலைகுட்டி #சந்தபுள்ளகுட்டி #மயிலைகுட்டி #மயிலைநாய் #சாம்பபுள்ள #மயிலபுள்ள #சந்தனபருக்கி #பால்பருக்கி #செம்பருக்கி #அடர்சாம்பநாய் #சாம்பநாய் #சாம்பநாய்குட்டி #சாம்பநாய்வளர்ப்பு #சாம்பநாய்விற்பனை #செங்கபருக்கி #செங்கன்னி #கருங்கன்னி #பால்கன்னி #புள்ளகன்னி #சாம்பபுள்ள #மயிலபுள்ள #வெளுருனபுள்ள #கீரிபுள்ள #கருங்கபிள்ள #செம்மறை #வெங்கால் #பூவால் #நெஞ்சுவெள்ள #பிடதிமற #பாச்சகழுத்து #வட்டச்செம்மற #பூதச்செம்மறை #மறைநாய் #மரநாய் #மடிக்காது #குத்துகாது #நறுக்குகாது #கன்னிநாய்காது #கன்னிநாய்வால் #இரட்டகுறுக்கு #ஒத்தகுறுக்கு #குறநாடி #இராஜபாளையம் #இராஜபாளையம்குட்டி #இராஜபாளையம்நாய் #இராஜபாளையம்வளர்ப்பு #இராஜபாளையம்சிறப்பு #இராஜபாளையம்பயிற்சி #இராஜபாளையம்நாய் #கன்னிநாயின்கதை #கன்னிநாய்இந்தியநாய் #கன்னிநாய்இந்தியநாய்இனம் #கன்னிநாய்இனதகவல் #கன்னிநாய்உண்மை #கன்னிநாய்குதித்தல் #கன்னிநாய்க்குட்டிகள் #கன்னிநாய்போர்வீரர்கள்வரலாறு #கன்னிநாய்வரலாறு #கன்னிநாய்அற்புதமானதகவல் #கன்னிநாய்கள்இனப்பெருக்கம் #கன்னிநாய்குணம் #கன்னிநாய்ஓட்டம் #கன்னிநாய்ஆட்டம் #கன்னிநாய்திட்டம் #கன்னிநாய்வீடியோ #கன்னிநாய்புகைப்படங்கள் #கன்னிநாய்போட்டோ #கன்னிநாய்நீச்சல் #கன்னிநாய்வேகம் #தமிழ்நாட்டுகன்னிநாய் #கன்னிநாய்தமிழ் #கன்னிநாய்தமிழ்நாடு #தமிழ்நாட்டின்கன்னிநாய் #கன்னிநாய்நெல்லை #கன்னிநாய்திருநெல்வேலி #தூத்துக்குடிகன்னிநாய் #தூத்துக்குடிகன்னிநாய்குட்டி #தூத்துக்குடிகன்னிநாய்விற்பனை #திருநெல்வேலிகன்னிநாய் #கயத்தாறுடிகன்னிநாய் #சிவசித்து #கன்னிநாய்சிவசித்து #நாட்டுநாய்சிவசித்து #வேட்டைநாய்சிவசித்து #சிப்பிப்பாறைநாய்சிவசித்து #மதுரைகன்னிநாய் #செங்கோட்டைகன்னிநாய் #கேரளாகன்னிநாய்கள் #கன்னிநாய்கள் #கன்னிநாய்குட்டிகள் #கன்னிநாய்மரபுகள் #கன்னிநாய்இனவழிகள் #கன்னிநாய்கள்தோற்றம் #கன்னிநாய்பூர்வீகம் #கன்னிநாய்அழிவு #கன்னிநாய்அறிவு #dogs #dogsofinstagram #dog #dogstagram #puppy #instadog #doglover #dogoftheday #doglovers #pets #doglife #love #puppylove #pet #puppies #cute #dogsofinsta #puppiesofinstagram #instagram #of #doggo #petsofinstagram #ilovemydog #dogslife #animals #cats #petstagram #doglove #adoptdontshop #bhfyp

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

இரா. சிவசித்து

நாட்டு இனங்கள் தேடலில் எனக்கென அடையாளத்தை கொடுத்திருப்பது நாட்டு இன நாய்கள்தான். 14 வயதில் இருந்து ஆரம்பமான பயணம் இன்றும் ஓயவில்லை. அறிதல் எனும் கடலில் கரைதேடி அலைந்து கொண்டிருக்கும் கட்டுமரமாக நான் இருப்பதில் பெருமை கொள்கிறேன். அலைபேசி எண்: 81223 32271 | 63804 78387

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!