விநோதங்கள்

எஜமான் ஒரு நாள் வருவார்; உறையும் குளிரில் ஒரு வருடம் காத்திருக்கும் நாய்

waiting cold dog one year - owner

சைபீரியா நாட்டைப்பற்றி நாம் அறிந்திருப்போம். உறைய வைக்கும் குளிர் நாடு. அங்கே உள்ள ஒரு வீதியில் கடந்த ஒரு வருடமாக ஒரு நாய் காத்திருக்கிறது. ஏன் அதே இடத்தில் இந்த குறித்த நாய் எப்பவும் காத்திருக்கிறது என்று பலர் நினைத்துப் பார்ப்பது உண்டு. அவ்வழியில் செல்லும் பலர் அந்த நாய்க்கு , உணவுகளை எறிந்துவிட்டுச் செல்வது உண்டு. அதனை உண்டு விட்டு இரவு பகலாக அந்த நாய் அந்த இடத்திலேயே கத்து நிற்கிறது. காரணத்தை கேட்டால் கண்களில் கண்ணீர் தான் வரும். பல வருடங்களான தன்னை வளர்த்து வந்த எஜமான் வருவார் என்பது அதான் அதன் நம்பிக்கை. வழமையாக அந்த நாயின் எஜமான் காரில் வந்து , அந்த இடத்தில் தனது நாயை இறக்கிவிட்டு செல்வதும். பின்னர் அதனை சற்று நேரம் கழித்து ஏற்றிச் செல்வதும் வழக்கமாம்.

அந்த வேளை நாய் சிறு நீர்கழித்து தனது வேலைகçe முடித்து விட்டு ஆயத்தமாக இருக்கும் எஜமான் வந்து ஏற்றிச் செல்வார். ஆனால் கடந்த 2014ம் ஆண்டில் அவர் நாயை இறக்கிவிட்டுச் சென்றவேளை ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். அவரை அம்பூலன்ஸ் அருகில் உள்ள வைத்தியசாலக்கு கொண்டு சென்ற விடையமோ, இல்லை அவர் இறந்துபோனதோ அந்த நாய்க்கு தெரியாது. இதனால் தனது எஜமான் ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையை சற்றும் இழக்காமல் இன்றுவரை அந்த நாய் தன்னை எஜமான் இறக்கிவிட்ட இடத்தில் காத்து நிற்கிறது. பலர் வந்து நாயை தமது வீட்டுக்கு அழைத்துச் செல்ல எத்தணித்துப் பார்த்துள்ளார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இரக்க மனம் கொண்டவர்கள், நாயின் மனதை புரிந்துகொண்டவர்கள் அந்த இடத்திலேயே ஒரு சிறிய குடிசை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். அந்த நாய் அங்கே சென்று உறங்கிவிட்டு மீண்டும் வந்து அங்கே காத்து நிற்கிறது. ஆனால் அது நீண்ட நாள் உயிர் வாழாது என்று கூறுகிறார்கள். காரணம் கடும் குளிர். இப்புகைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து இந்த நாய்க்கு அனுதாபச் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. செய்த உதவியை அடுத்த கணமே மறந்துவிட்டு செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் , இப்படி ஒரு நன்றியுள்ள ஜீவன்.

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
பகிருங்கள்
Source
https://www.dailymail.co.uk/https://www.tamilmithran.com

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Tamil Pets !!