பூனைகள்விநோதங்கள்

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பூனை குட்டி

A tiny Two Face Cat News

மனிதர்களைப் போல் இரட்டைத் தலையுடன் விலங்குகள் பிறப்பது இயல்பான ஒன்று என்றபோதும், அதனை பார்ப்பது மட்டுமல்ல அது தொடர்ந்து வாழ்வதும் அபூர்வமானது. ஆம் அப்படி ஒரு அதிசயம் அமெரிக்காவில் உள்ள Linn County, Oregon எனும் இடத்தில் வசிக்கும் ஒருவர் வீட்டில் அவர் வளர்க்கும் செல்லப் பூனை, இரட்டைத் தலையுடன் ஒரு குட்டியை ஈன்று உள்ளது.

இந்த அதிசயமான இரட்டைத் தலையுடைய பூனைக் குட்டிக்கு பிஸ்கட் மற்றும் ஆன்ட் கிரேவி (biscuits_andgravy) என பெயரிட்டுள்ளார். பிஸ்கட் கிரே மற்றும் கருப்பு நிறத்தில் சின்னஞ் சிறிய இரண்டு மூக்கு, நான்கு கண்கள் என பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பூனைக் குட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதன் உரிமையாளர் இதற்கென ஒரு இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் தினமும் அதன் வளர்ச்சி குறித்தும், அது புரியும் சேட்டைக் குறித்தும் பதிவிட்டு வருகின்றார்.

இதற்கு முன்பும் பல பூனைக்குட்டிகள் இரண்டு முகத்துடன் பிறந்திருந்தாலும், இந்த பூனைக்குட்டி வரைலாகி பலரது இதயத்தை கவர்ந்துள்ளது. இதன் ஆயுள் காலம் எவ்வளவு என்பதில் சிக்கல்கள் இருந்தாலும், இதனை நன்றாக வளர்க்க உள்ளதாகவும், முடிந்தவரை அதற்கான அனைத்து மருத்துவமும் பார்ப்பதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

இரட்டைத் தலையுடைய பூனைக் குட்டி நீண்ட காலம் வாழ பலரும் இன்ஸ்ட்ராகிராமில் தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பதிவிட்டு வருகின்றனர். என்னதான் செல்லப்பிராணிகளின் உலகம் தனித் தன்மை வாய்ந்ததுதான்.

வீடியோ உங்கள் பார்வைக்கு

 

உங்களுக்கு பிடித்த லைக் போடுங்க
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

admin

செல்லப்பிராணிகள் வளர்ப்பு முதல் வாழ்வு வரை அனைத்துவிதமான தகவல்களும் தமிழ் பெட்ஸ் இணையதளத்தில் ஒருங்கே காணலாம். செல்லப்பிராணிகள் குறித்து எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை கிடைக்கும் என்று நம்புகின்றோம். நீங்களும் எங்களுடன் இணைந்து செல்லப்பிராணிகள் குறித்து உங்கள் அனுபவங்களை பகிரலாம். எங்களது மின்னஞ்சல் முகவரி: tamilpets2020@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Tamil Pets !!